Friday, April 29, 2011

குறைந்தபட்சம் 3000!


8 வது வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கோடை விடுமுறை காலத்தில் குறைந்தபட்சம் மூவாயிரம் பேராவது அனிமேஷன் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த கேரள அரசு, அதற்கான ஏற்பாட்டில் இறங்கியுள்ளது. அதன்பேரில், முதல் பிரிவுக்கு 700 மாணவர்களை தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு ஒரு திரைப்படத்தில் எப்படி அனிமேஷன் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அனிமேஷனில் கதை சொல்வது, சவுண்ட் எஃபக்ட் போன்ற விஷயங்களையும் இந்த குறுகிய காலப் பயிற்சியில் கற்றுக்கொடுக்கிறது. இதற்காக கேரள பள்ளிக் கல்வித் துறை முன்னணி ஐ.டி. துறைகளுடன் கைகோர்த்துள்ளது.